வனப்பகுதியைத் தவிர்க்குமாறு நெதர்லாந்து அவசர எச்சரிக்கை
மத்திய நெதர்லாந்தில் உள்ள வனப்பகுதியைத் தவிர்க்குமாறு பார்வையாளர்களுக்கு அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் ஓநாய் தாக்குதலுக்கு இலக்கான இரண்டு சன்பாவங்களை தொடர்ந்து, இளம் குழந்தைகளை உட்ரெக்ட் நகருக்கு அருகிலுள்ள பிரபலமான காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று மத்திய டச்சு மாகாணம் பெற்றோரை அவசரமாக எச்சரிக்கிறது.
ஓநாய்கள் ஜெர்மனியில் இருந்து வந்ததிலிருந்து பல ஆண்டுகளாக நெதர்லாந்தின் கிராமப்புறங்களில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பரவி வருகின்றன.





