பொழுதுபோக்கு விளையாட்டு

விவாகரத்தை கூட்டாக அறிவித்த ஹர்திக் பாண்டியா – நடாஷா…

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு செர்பிய நடிகை மற்றும் மாடல் நடாஷா ஸ்டான்கோவிக்கை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாகவே இவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து ஹர்திக் மற்றும் நடாஷா இருவருமே மௌனம் காத்து வந்த நிலையில், நடாஷா தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த பாண்டியா என்ற பெயரை நீக்கியதும் சமூக வலைதளங்களில் இருவரும் இணைந்து இருந்த புகைப்படங்களை நீக்கியது உள்ளிட்ட செயல்களால் இவர்களது விவாகரத்து ஏறக்குறைய உறுதியானது.

இந்நிலையில் தற்போது இருவரும் கூட்டாக தங்களது பிரிவு குறித்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

ஹர்திக் -நடாஷா இருவரும் கூட்டாக இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

“இது மிகவும் கடினமான முடிவு என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவை தாங்கள் இருவரும் இணைந்து எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மகன் அகஸ்தியாவின் எதிர்காலத்திற்கு இருவரும் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கடினமான நேரத்தில் தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று தான் நம்புவதாகவும்” ஹர்திக் மற்றும் நடாஷா இருவரும் தெரிவித்துள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்

You cannot copy content of this page

Skip to content