சரியான நேரத்திற்காக காத்திருக்கும் இஸ்ரேல்
ஈரானுக்கு பதிலடி கொடுப்பதற்காக சரியான நேரத்திற்காக காத்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்த தாக்குதல்களுக்குச் சரியான நேரம் வரும்போது அதனைப் பொறுப்பேற்கச் செய்யப்போவதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.
பிரச்சினை மோசமடைவதைத் தவிர்க்குமாறு அனைத்துலகச் சமூகம் நெருக்குதல் அளிக்கும் நிலையில் இஸ்ரேல் அவ்வாறு கூறுகிறது.
இஸ்ரேல் மேலும் தவறிழைத்தால் பதிலடி இதைவிட மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்திருந்தது.
இஸ்ரேலை நோக்கி ஈரான் 300க்கும் அதிகமான வானூர்திகளையும் ஏவுகணைகளையும் பாய்ச்சியது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரான் பாய்ச்சியவற்றில் 99 விழுக்காடு தகர்த்தப்பட்டன என்று இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஏப்ரல் முதலாம் தேதி சிரியாவில் உள்ள தெஹ்ரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ஆகாயத் தாக்குதலுக்கு அது பதிலடி என்று ஈரான் கூறியது. அந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக நம்பப்படுகிறது.