இன்றைய முக்கிய செய்திகள்

இந்தியா பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை ஏற்படலாம் – ட்ரம்ப் ஆரூடம்

  • July 31, 2025
  • 0 Comments

பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக இந்தியா எதிர்காலத்தில் பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் வாய்ப்பு இருக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பகிரப்பட்ட செய்தியில், “பாகிஸ்தான் உடன் எண்ணெய் ஒப்பந்தங்களில் இணைந்து செயல்பட உள்ளோம். அந்நாட்டில் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு கிடங்கை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்,” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த நவீன வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான்-அமெரிக்க உறவுகள் வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதன் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவிலிருந்து கணவரை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்த மனைவி

  • July 31, 2025
  • 0 Comments

இந்தியப் பெண் ஒருவர் தனது கணவர் தன்னை மற்றும் தங்களது மகளையும் விட்டு கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குச் சென்றதாக தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்கக் குடிநுழைவுத்துறையை குறிப்பிட்டு, தனது கணவரை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றி, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். முறைப்பாட்டாளரான மனைவி கூறியதாவது, 2022-ஆம் ஆண்டில், இந்தியாவில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பொய்யான தகவலைக் கொடுத்து என் கணவர் அமெரிக்காவில் புகலிடம் கோரிக்கைச் செய்தார். அதே நேரத்தில், அவர் அமெரிக்காவில் வேறொருவரை திருமணம் செய்யப் […]

பொழுதுபோக்கு

நடிகை ராதிகா திடீரென வைத்தியசாலையில் அனுமதி

  • July 31, 2025
  • 0 Comments

பிரபல நடிகை ராதிகா டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் 5 நாட்கள் மருத்து சிகிச்சையின் பின்னர் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியாகியதும், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலர்கள் சமூக ஊடகங்களில் அவருக்கு விரைவில் குணமாக வேண்டும் என பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். தன்னுடைய உறுதியான மனோபாவத்தால் விரைவில் குணமடைவார் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை

இலங்கையில் அதிகாலையில் உலுக்கிய துப்பாக்கிச்சூடு

  • July 31, 2025
  • 0 Comments

காலி, கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களால் T56 துப்பாக்கியால் சுடப்பட்டு, 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உலகம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க கனடா இணக்கம்

  • July 31, 2025
  • 0 Comments

பாலஸ்தீன வட்டாரத்தைத் தனிநாடாக அங்கீகரிக்க கனடா இணக்கம் வெளியிட்டுள்ளது. சில நிபந்தனைகளின் அடிப்படையில் செப்டம்பர் மாதம் அது சாத்தியமாகலாம் என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி கூறினார். பாலஸ்தீன நிர்வாகம் அதன் அடிப்படைக் கட்டமைப்பைச் சீரமைக்க வேண்டும். ஹமாஸ் குழுவின் பங்கேற்பு இல்லாமல் அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அவர் முன்வைத்துள்ளார். அண்மை நாள்களில் பாலஸ்தீன வட்டாரத்தைத் தனிநாடாக அங்கீகரிக்கப் போவதாக G7 தொழில்வள நாடுகள் அறிவிக்கின்றன. பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றைத் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

5,900 டொலருக்கு மனித உருவ ரோபோக்களை களமிறக்கும் சீனா!

  • July 31, 2025
  • 0 Comments

யூனிட்ரீ ரோபோடிக்ஸ் (Unitree Robotics) என்ற சீன நிறுவனம் வெறும் $5,900 விலையில் R1 என்ற மனித உருவ ரோபோவை வெளியிட்டுள்ளது. இந்த விலை, இந்தியாவின் MG Comet EV காரை விடவும் குறைவாகும். சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், R1 ரோபோ தனது திறன்களை வெளிப்படுத்தியுள்ளது. கைகளால் நடப்பது, கார்ட்வீல் அடிப்பது, குத்துவிடுவது, படுத்து எழுவது மற்றும் ஓடுவது போன்ற சாகசங்களைச் செய்கிறது. சுமார் 25 கிலோ எடையும், 4 அடி உயரமும் கொண்ட இந்த […]

விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

  • July 31, 2025
  • 0 Comments

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின் தங்கி உள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக செயல்பட்டு […]

இலங்கை

இலங்கையில் இன்றைய காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

  • July 31, 2025
  • 0 Comments

எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான சற்று பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் […]

செய்தி

ஆஸ்திரேலியாவில் வேற்றுகிரகவாசிகள் என நினைத்து தனது பிள்ளைகளுக்கு தாய் செய்த கொடூரம்

  • July 31, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தனது 2 மகன்களை கொலை செய்ய முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தனது 2 மகன்களும் தன்னைக் கொல்ல அனுப்பப்பட்ட வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கத்தியால் குத்தியதாக தாய் தெரிவித்தார். அடிலெய்டு நகரில் வசித்து வந்த அடிலெய்டு பெண், தெற்கு ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றத்தில், இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் அவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார், மேலும் முன்னர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. தாக்குதலுக்கு முன்பு அந்தப் பெண் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை வட்ஸ்அப் பயனர்கள் சிஐடி விடுத்த அவசர எச்சரிக்கை

  • July 31, 2025
  • 0 Comments

சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வட்ஸ்அப் பயனர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடிக்காரர்கள் வட்ஸ்அப் பயனர்களை குறி வைத்து, அவர்களது கணக்குகளை ஹேக் செய்து பண மோசடி மேற்கொள்வது அதிகரித்துள்ளதாக சிஐடி தெரிவித்துள்ளது. இவ்வகை மோசடிகள் பெரும்பாலும் ஓடிபி பகிரும் செயல்முறையை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றன. முதலில், பாதிக்கப்பட்டவரின் மொபைலுக்கு ஓடிபி குறியீடு குறுஞ்செய்தியாக வரும். பின்னர், தெரியாத எண்ணிலிருந்து, “தவறாக உங்கள் எண்ணுக்கு ஒரு […]