இலங்கை

இலங்கை – கிண்ணியா கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்..!

  • July 18, 2024
  • 0 Comments

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனா கடற்கரையில், பெண்ணின் சடலமொன்று இன்று(18) காலை மீட்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா அஹமட் லேன் வீதியைச் சேர்ந்த 33 வயதான பெண் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் புத்தி சுவாதீனமற்றவர் எனவும் கடலில் குளிப்பதற்காக இன்று(18) காலை கடலில் இறங்கியதால் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது. பெண்ணின் சடலத்தை விசாரனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உலகம்

கென்யாவில் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆர்ப்பாட்டங்களுக்கு தடை!

  • July 18, 2024
  • 0 Comments

கென்யாவின் தலைநகரான நைரோபியில் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்ய கென்யா காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் ஊடுருவி கலவரச் சூழலை உருவாக்குவதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். வரிகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டில் உள்ள இளைஞர்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர், இதன் போது இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த திட்டம் ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவால் வாபஸ் பெறப்பட்டது, […]

ஆசியா

இந்தோனேசியாவில் ‘ஏஞ்சல்ஸ் ட்ரம்பெட்’ பழத்தைச் சாப்பிட்ட இருவர் பலி, 50 பேர் மருத்துவமனையில்…

  • July 18, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவின் தெற்கு கலிமந்தானில் ‘ஏஞ்சல்ஸ் ட்ரம்பெட்’ பழத்தைச் சாப்பிட்டதாக நம்பப்படும் இரண்டு பேர் நச்சுத்தன்மை காரணமாக உயிரிழந்தனர். ஐம்பது பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்று அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் வன்முறையுடன் நடந்துகொண்டதுடன் பிரம்மை பிடித்தவர்போல செயல்பட்டனர். சிலர் தங்களுக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாகக் கூறிக் கொண்டனர். அண்டாரா செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களின் வயது 22 முதல் 50 வரையிலாகும். அவர்கள், தெற்கு கலிமந்தானில் உள்ள பல்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள். பழத்தைச் சாப்பிட்ட […]

உலகம்

35 ஐரோப்பிய நாடுகளுக்கு 90 நாள் விசா இல்லாத நுழைவை அறிமுகப்படுத்தும் பெலாரஸ்

பாரம்பரியமாக ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான பெலாரஸ், ​​35 ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களுக்கு 90 நாள் விசா இல்லாத நுழைவை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. . புதிய கொள்கையின்படி, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட 35 பட்டியலிடப்பட்ட நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் பெலாரஸுக்குள் நுழைந்து ஆண்டுக்கு 90 நாட்கள் வரை தங்க முடியும். தற்போது, ​​அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 30 நாட்களுக்கு மட்டுமே பெலாரஸில் இருக்க முடியும் மற்றும் மின்ஸ்க் விமான […]

பொழுதுபோக்கு

‘சூப்பர் ஸ்டாருக்குப் பிறகு அவர்தான்” தல என்ன சொன்னார் தெரியுமா?

  • July 18, 2024
  • 0 Comments

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கேள்விகளுக்குப் பதில் அளித்த எம்.எஸ்.தோனி, “தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகர் சூர்யா தான்” என்று கூறினார். ஒரு முறை தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியை முன்னிட்டு சென்னைக்கு வந்த எம்எஸ் தோனி, நடிகர் சூர்யாவைத் தனக்குப் பிடித்த தமிழ் நடிகர் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யாவின் சிங்கம் […]

ஐரோப்பா

இத்தாலியில் வரலாற்று சிறப்புமிக்க சிலையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெண்!

  • July 18, 2024
  • 0 Comments

இத்தாலிய அதிகாரிகள் புளோரன்ஸ் நகரில் உள்ள பாக்கஸ் சிலையுடன் பாலியல் சீண்டல்களை மேற்கொண்ட பெண் ஒருவரை தேடி வருகின்றனர். அடையாளப்படுத்தப்படாத குறித்த பெண் தற்போது வாழ்நாள் முழுவதும் நகரத்தில் இருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணானவர் கியாம்போலோனாவின் பச்சஸ் மீது ஏறி இத்தாலிய வெண்கலச் சிலையை முத்தமிடுவதை  ஒளிப்படங்கள் காட்டுகின்றன. அவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் நாட்டில் கலாச்சார பாரம்பரியத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தடைசெய்யும் சட்டத்தின்படி, அவர் அபராதங்களை எதிர்கொள்ளலாம் […]

உலகம்

மெக்சிகோவில் கட்டுமானத் தளத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்கள்!

  • July 18, 2024
  • 0 Comments

மெக்சிகோவின் வன்முறை மாநிலமான குவானாஜுவாடோவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஒரே மாதத்தில் நடந்த இரண்டாவது படுகொலை சம்பவம் இதுவாகும். குவானாஜுவாடோ மற்றும் பிற மாநிலங்களில் போதைப்பொருள் விற்பனையாளர்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பெரும்பாலும் குடும்ப பெண்கள் மற்றும் குழந்தைகள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் யூரிரியா பகுதியில் கட்டுமான தளத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த ஆறு பேர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவானாஜுவாடோவின் வழக்குரைஞர் அலுவலகம் கொலைகள் குறித்து விசாரித்து வருவதாகக் கூறியது, ஆனால் இதுவரை எந்த […]

பொழுதுபோக்கு

முழுக்க முழுக்க பக்தி நாயகனான மாறப்போகும் பிரபாஸ்? மறுபடியுமா???

  • July 18, 2024
  • 0 Comments

பிரபாஸை வைத்து முழுக்க முழுக்க ஒரு பக்தி படத்தை எடுக்க ஒரு நட்சத்திர இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு பிரபாஸும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் பிரபாஸ் பான் இந்தியா ஹீரோவாக வலம் வருகிறார். பிரபாஸ் நடிப்பில் வெளியான `கல்கி 2898’ ஏடி படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. இந்த படம் ஏற்கனவே 1000 கோடி வசூலை கடந்துள்ள நிலையில் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று […]

ஐரோப்பா

டொனால்ட் ட்ரம்பால் ஐரோப்பிய நாடுகளுக்கு எழுந்துள்ள சிக்கல் : குழப்பத்தில் தலைவர்கள்!

  • July 18, 2024
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்றால், அமெரிக்கா நம்பகமான கூட்டாளியாக இருக்குமா என்ற கவலை  ஐரோப்பிய நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட U.K பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்து மற்றும் அதன் ஐரோப்பிய ஒன்றிய அண்டை நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மீட்டெடுக்க முற்படுகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இடம்பெயர்வு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் ரஷ்யாவின் அச்சுறுத்தல் பற்றி விவாதிக்க சுமார் 45 நாடுகளின் தலைவர்கள் ஒன்றுக்கூடுகின்றனர். இதன்போது […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கான செய்தி : தவறவிடாதீர்கள்!

  • July 18, 2024
  • 0 Comments

ஐரோப்பாவில் குறைந்த வட்டி விகிதங்களுக்காகக் காத்திருக்கும் வீடு வாங்குபவர்கள் மற்றும் வணிகங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கியானது பணவீக்கத்தை குறைக்கும் முன் உறுதியான கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இப்போது ECB இன் நிலைப்பாடு அமெரிக்க பெடரல் ரிசர்வ் நிலைப்பாட்டை ஒத்திருக்கிறது. இது ஜூலை 30-31 நடக்கும் அடுத்த கூட்டத்தில் விகிதங்களைக் குறைப்பதைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூட்டத்திற்கு பிறகு பெடரல் வங்கியானது ஐரோப்பிய […]

error: Content is protected !!