2024 ஜனாதிபதி தேர்தல் – இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பதை தொடர்பில் அவர்களது தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையின் பின்னர் தீர்மானிக்கப்படும் என இலங்கைத் தமிழ் அரசு கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (18) வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்றதுடன் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி ஆதரவளிக்க வேண்டிய ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதன் பின்னர் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
(Visited 16 times, 1 visits today)