இலங்கை

திருகோணமலை:கிராமத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் – அச்சத்தில் அப்பகுதி மக்கள்

  • September 29, 2023
  • 0 Comments

திருகோணமலை-நாமல்வத்தை கிராமத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம் செய்ததால் எட்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர். மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாமல்வத்தை கிராம மக்கள் வீட்டுத் தோட்டம், விவசாயம் போன்றவற்றை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.குறித்த கிராமத்தை சுற்றி யானை மின் வேலிகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் யானைகள் மாலை 6.00 மணிக்கே கிராமத்துக்குள் உட்புகுந்து வீட்டுத் தோட்டங்கள்,தென்னை மரங்கள்,வாழை மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி வருவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர். இதேவேளை யானையை விரட்டுவதற்காக முற்படுகின்ற போது […]

இந்தியா

கரையானால் பறிபோன 18 லட்சம் ரூபாய்… வங்கி Locker-ல் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • September 29, 2023
  • 0 Comments

இந்தியாவில் உத்திரபிரதேசத்தில் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த பணத்தை கரையான் அரித்த சம்பவம் அப்பகுதியில் பெரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உத்திரபிரதேசத்தில் மொராதாபாத்தை சேர்ந்த அல்கா பதக் என்ற ஒரு பெண்ணின் வங்கி கணக்கில் இருந்தே சம்பவம் நிகழந்துள்ளது. தனது மகளின் திருமணத்திற்காக பணத்தை சேமித்து வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதில் நகைகள் மற்றும் இந்திய மதிப்பில் 18 இலட்சம் ஆகியவற்றை பத்திரப்படுத்தினார்.அண்மையில் வங்கி மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்ததால், அவ்வேளையில் தனது பெட்டகத்தை பார்த்து அதிர்ச்சியில் மயங்கி […]

இலங்கை

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரல்!

  • September 29, 2023
  • 0 Comments

வறண்ட காலநிலை நிலவிய மாதங்களில் அனல் மின் உற்பத்திக்கான செலவினங்களை ஈடுசெய்ய வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி, மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட இந்த ஆண்டுக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இவங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் […]

ஐரோப்பா

உஸ்பெகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியின் மகள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சுவிஸ்

  • September 29, 2023
  • 0 Comments

உஸ்பெகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியின் மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சுவிட்சர்லாந்தின் பெடரல் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.குறித்த நபர் லஞ்சம் வாங்கியதாகவும், தி ஆபீஸ் என்ற புனைப்பெயரில் குற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கும் அமைப்பு ஒன்றையும் அவர் நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். உஸ்பெகிஸ்தானில் 1991 முதல் 2016 வரையில் ஜனாதிபதியாக இருந்தவர் இஸ்லாம் கரிமோவ். இவரது மகள் Gulnara Karimova என்பவரே தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் மதிப்பிலான லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.ஆனால் இந்த விவகாரத்தில் […]

ஐரோப்பா

தற்கொலைக்கு தூண்டிய சமூக ஊடகம்…நீதிமன்றம் சென்றுள்ள பிரெஞ்சு பெற்றோர்

  • September 29, 2023
  • 0 Comments

சமூக ஊடகங்கள், இளம் பிள்ளைகளை தற்கொலைக்கு தூண்டுவதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் ஒரு இளம்பெண்ணின் தற்கொலைக்குக் காரணம் ஒரு சமூக ஊடகம் என்று கூறி, அவளது பெற்றோர் நீதிமன்றம் சென்றதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது. யூடியூபில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நடிகரின் திரைப்படக் காட்சிகளை அடிக்கடி பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, நீங்கள் யூடியூபைத் திறந்தாலே, தொடர்ச்சியாக அந்த நடிகர் நடித்த திரைப்படக் காட்சிகள் அங்கு […]

பொழுதுபோக்கு

’மார்க் ஆண்டனி படத்திற்காக லட்சக்கணக்கில் லஞ்சம்: விஷால் கூறிய அதிர்ச்சி தகவல்!

  • September 29, 2023
  • 0 Comments

நடிகர் விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை சென்சார் செய்வதற்காக லஞ்சம் கொடுத்துள்ளதாக விஷால் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்தி பதிப்பை சென்சார் செய்வதற்காக சென்சார் அதிகாரிகளுக்கு 6.5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாகவும் 3 லட்ச ரூபாய் படத்தை திரையிடுவதற்கு, 3 லட்ச ரூபாய் சென்சார் சான்றிதழ் வழங்குவதற்கு கொடுக்கப்பட்டதாகவும் […]

இலங்கை

சமூக ஊடக தணிக்கை செய்யக்கூடாது – மஹிந்த கருத்து

  • September 29, 2023
  • 0 Comments

சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் மீது கொண்டு வரப்படவுள்ள சட்டமூலம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது என்று கூறிய அவர், விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்றும், தன்னை பற்றி எதனை கூறினாலும், தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என மஹிந்த குறிப்பிட்டுள்ளார். எனினும், சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் […]

இலங்கை

கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவர் தெரிவு

  • September 29, 2023
  • 0 Comments

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் மீண்டும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற 45-20 என்ற கணக்கில் ஜஸ்வர் உமர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பு தொடர்பான விஷயங்களில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு மற்றும் 2023 ஜனவரியில் நடைபெற்ற இலங்கை கால்பந்துத் தேர்தல்கள் தொடர்பான புகார்கள் காரணமாக, இலங்கை கால்பந்து சம்மேளனம் 2023 ஜனவரி 21 முதல் FIFA ஆல் இடைநிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், உலக […]

இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா பதவி விலகல் – நீதித்துறை எங்கே செல்கிறது? செல்வம் அடைக்கலநாதன் அதிருப்தி

  • September 29, 2023
  • 0 Comments

தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத் தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்பொழுது வெளிப்படையாக தெரிகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”உண்மையிலேயே இந்த நாட்டில் நீதித்துறை நேர்மையான முறையாக […]

இலங்கை

மன்னார் – முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடையில் மீட்கப்பட்ட சடலம்

  • September 29, 2023
  • 0 Comments

மன்னார் – சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்து பல நாட்கள் ஆகி சிதைவடைந்து எலும்புகள் தெரியும் வண்ணம் குறித்த சடலம் காணப்படுகின்றது. முத்தரிப்புத்துறை மீனவர்களால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) இந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் வலை பாய்ச்சுவதற்காக சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பாக சிலாவத்துறை பொலிஸாருக்கு மீனவர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.