பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த சிவநேசத்துரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் (2004 – 2006) பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் இராஜாங்க அமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 2006ஆம் ஆண்டு விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அதன் போது பேராசிரியர் கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்தது.
இச்சம்பவம் இடம்பெற்று சுமார் 19 வருடங்களின் பின்னர், இது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .





