தென் கொரிய இளைஞர்களின் சமூகமயமாக்கலுக்கு மாதத்திற்கு 500 டொலர் உதவித்தொகை
சமூகப்பற்றற்ற தென் கொரிய இளைஞர்களை சமூகமயமாக்கும் வகையில், ஒரு நபருக்கு மாதந்தோறும் 500 டொலர் உதவித்தொகை வழங்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
19 முதல் 39 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 3.1% பேர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை அந்நாட்டு அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
நிதிச் சிக்கல்கள், மனநோய், குடும்பப் பிரச்சனைகள் அல்லது உடல்நலச் சவால்கள் போன்ற காரணங்களால் தென் கொரியாவில் இளைஞர்கள் சமூகத்திலிருந்து விலகியிருப்பது தெரியவந்துள்ளது.
இளைஞர் நலன் ஆதரவுச் சட்டத்தின்படி மாதத்திற்கு 500 டொலர்கள் ஒதுக்கப்படுகிறது, இது சமூகத்திலிருந்து மிகவும் பின்வாங்கப்பட்டவர்கள் மற்றும் பாதுகாவலர் அல்லது பள்ளி பாதுகாப்பு இல்லாத இளைஞர்களை இலக்காகக் கொண்டது.
நான்கு நபர்களைக் கொண்ட குடும்பத்தின் மாத வருமானம் 4,164 டொலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், 9 முதல் 24 வயதுக்குட்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் வசிக்கும் மக்கள் இந்தக் கொடுப்பனவுக்கு உரிமையுடையவர்கள் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.