சிங்கப்பூரில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயலும் குடும்பங்களுக்கு உதவி
சிங்கப்பூரில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் முனைப்புக் காட்டும் குடும்பங்களுக்கு அதிக ஆதரவு தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் Masagos Zulkifli இதனை கூறியிருக்கிறார்.
குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு, வரும்முன் காக்கும் ஆதரவு அதிக அளவில் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான வேலையைத் தேடிக் கொள்வோர், பிள்ளைகள் பாலர் பள்ளியில் சேர்வதை உறுதிப்படுத்துவோரை ஊக்கப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னேறும் சிங்கப்பூர் கலந்துரையாடல்களின்போது அந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் Masagos கூறினார்.
வசதி குறைந்த குடும்பங்களைக் கைதூக்கிவிடவும், அனைத்துப் பிள்ளைகளுக்கும் வாழ்க்கையில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தரவும் அரசாங்கம் கூடுதல் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.