கடத்தப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு $1 மில்லியன் கப்பம் கோரும் சூடானின் துணை ராணுவம்
சூடானின் துணை ராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகள் (RSF), அல்-ஃபாஷிர்(Al-Fashir) நகரில் கடத்தப்பட்ட ஆறு சுகாதாரப் பணியாளர்களை விடுவிப்பதற்காக $1 மில்லியன் கப்பம்(ransom) கோருவதாக சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு (SDN) தெரிவித்துள்ளது.
அல்-ஃபாஷிர் முற்றுகையின் போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நான்கு மருத்துவர்கள், ஒரு மருந்தாளர் மற்றும் ஒரு செவிலியர் அடங்கிய பணயக்கைதிகள், சூடானின் விரைவு ஆதரவுப் படை மற்றும் கூட்டணிப் படைகளால் கடத்தப்பட்டனர்.
வடக்கு டார்ஃபர்(Darfur) மாகாணத்தின் தலைநகரான அல்-ஃபாஷிரை முழுமையாகக் கைப்பற்றியதாக சூடானின் விரைவு ஆதரவுப் படைகள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கடத்தல்கள் நடந்துள்ளன.
(Visited 3 times, 3 visits today)





