உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறிய இந்தியா
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் 1425.7 மில்லியன் சனத்தொகை காணப்படுவதாகவும் இருப்பினும் இந்தியாவின் மக்கள் தொகை 1428.6 மில்லியனை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 2011 க்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாததால் இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிக்கை ஒரு ஊகம் என்றும் கூறப்படுகின்றது.
இதேநேரம் தங்கள் மதிப்பீட்டில் சீனாவின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹாங்காங் மற்றும் மக்காவ் – மற்றும் தாய்வான் மக்கள் தொகையும் இல்லை என்றும் அறிவித்துள்ளது.
எனினும்இ தாய்வான் தனது சொந்த அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் சீன நிலப்பரப்பில் இருந்து வேறுபட்டதாகக் கருதுகிறது.
கடந்த வருடம் நவம்பரில் உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டியது. எனினும்இ வளர்ச்சி முன்பு போல் வேகமாக இல்லை என்றும்1950க்குப் பிறகு இப்போது மிகக் குறைந்த வேகத்தில் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும்இ இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தங்கள் கருவுறுதல் விகிதத்தில் சரிவைக் கண்டுள்ளதாக ஐ.நா. தரவுகள் காட்டுகின்றன.