வாடிக்கையாளர்களுக்கு காக்டெய்ல்களில் தன் இரத்தத்தை கலந்து கொடுத்த ஜப்பானிய பெண்!
ஜப்பானில் மதுபான விடுதி ஒன்றில், பணிப்பெண் ஒருவர் தான் தயாரித்த காக்டெய்ல்களில் தனது சொந்த இரத்தத்தைச் சேர்த்தற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஹொக்கைடோவின் சப்போரோவில் உள்ள Mondaiji cafe-ல், வாடிக்கையாளர்களுக்கு இரத்தம் கலந்த மதுபானங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஓரிகாகு அல்லது அசல் காக்டெய்ல் என்று அழைக்கப்படும் பானங்கள், பெரும்பாலும் பழங்கள் அல்லது பிற வண்ணமயமான சிரப்களைக் கொண்டிருக்கின்றன.Mondaiji cafe அதன் ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற செயல் பகுதி நேர வேலை பயங்கரவாதத்திலிருந்து வேறுபட்டதல்ல, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பதிவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, கண்ணாடி குவளைகள் அனைத்தையும் மாற்றுவதற்காக மதுபான விடுதி ஒரு நாள் மூடப்பட்டதாக Mondaiji cafe உரிமையாளர் கூறினார்.இந்த சம்பவத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணிப்பெண்ணின் பெயரை விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. ஆனால், இந்த சம்பவத்திற்கு கஃபே உரிமையாளரிடமிருந்து மன்னிப்பும் ட்விட்டரில் வெளியிடப்பட்டது.
Mondaiji cafe என்ற பெயர் தோராயமாக Problem Child Concept Cafe என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது – அதாவது சிக்கல் உள்ள குழந்தைகள் மற்றும் கருப்பான பெண்களும் அழகு தான் என்பதை வலியுறுத்தி அவர்களுக்கான சிறப்பு விடுதியாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் இடமாக விளம்பரப்படுத்துகிறது.
19 அமெரிக்க டொலர்களுக்குக் கிடைக்கும், அனைவரும் குடிக்கக் கூடிய மெனு, ஓட்டலின் சிறப்புகளில் ஒன்றாகும்.