கத்தாரில் எரிபொருள் கப்பல்மீது ஏவுகணைத் தாக்குதல்!
கத்தார் எனர்ஜி நிறுவனம் வாடகைக்கு எடுத்த “Aqua 1” என்ற எரிபொருள் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் இன்று (01) அதிகாலை கத்தாரின் வடக்கு கடல் எல்லைப் பகுதியில் நிஇடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தினால் கடலில் கசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் உண்டாகவில்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.





