மரணமும் பேரழிவும் நேரும்! ட்ரம்ப் பரபரப்பு எச்சரிக்கை
தமக்கு எதிராகக் குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் மரணமும் பேரழிவும் நேருமென அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆபாசப்பட நடிகை ஒருவரோடு உள்ள தகாத உறவை மறைக்க ட்ரம்ப் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதுபற்றி நியூயார்க் அரசுத்தரப்பு வழக்குரைஞர்கள் விசாரிக்கத் தொடங்கிய சில மணி நேரத்தில் ட்ரம்ப் அந்த எச்சரிக்கையை விடுத்தார்.
குறிப்பிட்ட ஆபாசப்பட நடிகையோடு தமக்கு எவ்விதத் தகாத உறவும் இல்லை என்று அவர் கூறிவருகிறார்.
அவருக்குப் பணம் கொடுத்தது, ஒரு தனிப்பட்ட பரிவர்த்தனை என்று மட்டும் ட்ரம்ப் கூறுகிறார்.
தாம் குற்றம் ஏதும் புரியவில்லை என்று வலியுறுத்திவரும் அவர், இந்தப் புலனாய்வு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குறைகூறினார்.
(Visited 3 times, 1 visits today)