சோபகிருது வருட தமிழ் புத்தாண்டு தரிசனம்
காலை தரிசனம் !
சோபகிருது வருட தமிழ் புத்தாண்டு தரிசனம்
வெள்ளிக்கிழமை நவமி திதியில் திருவோண நட்சத்திரத்தில் மதியம் 1.58 நிமிடத்தில் சுக்ரஹோரையில் அமிர்தமான வேளையில் சோபக்ருது வருடம் பிறக்கிறது
சோபக்ருது வருஷம் உண்மையில் மிக சிறந்த வருஷம்
இந்த வருஷத்திற்கு ராஜா புதன் ( கல்வி) மந்திரி சுக்கிரன் ( நல்லதை செய்பவன்)
இந்த வருஷத்துக்கான பாடல்
ஸஹோஜஸம் சோபக்ருதம் ந்ருணாமிஷ்டதமாஸ்ரயே
ஷிபிகா வாஹனாரூடம் சாமரத்வய பாணிகம்
அதாவது சோபக்ருது வருஷ அபிமானி ஸஹௌஜன் என்னும் தேவதையைப் போற்றும் விதமாக இப் பாடல் உள்ளது.
இன்று
வெள்ளிக்கிழமை !
சோபகிருது வருடம் !
சித்திரை மாதம்
01ம் தேதி
ஏப்ரல் மாதம்:
14ம் தேதி !
(14-04-2023)
சூரிய உதயம் :
காலை : 06.04 மணி அளவில் !
இன்றைய திதி :
இன்று அதிகாலை 12.30 வரை அஷ்டமி ! பின்பு இரவு 10.02 வரை நவமி !! பின்பு தசமி !!!
இன்றைய நட்சத்திரம் :
இன்று காலை 08.05 வரை உத்திராடம் ! பின்பு திருவோணம் !!
யோகம் :
இன்று காலை 08.05 வரை சித்தயோகம் !
பின்பு யோகம் நன்றாக இல்லை !!
இன்று
மேல் நோக்கு நாள் !
நல்ல நேரம் :
காலை : 09-30 மணி முதல் 10-30 மணி வரை !
மாலை : 04-30 மணி முதல் 05-30 மணி வரை !!
சந்திராஷ்டமம் :
திருவாதிரை ! புனர்பூசம் !!
ராகுகாலம் :
காலை : 10.30 மணி முதல் 12-00 மணி வரை !
எமகண்டம்
பிற்பகல் : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!
குளிகை :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!
சூலம் : மேற்கு !
பரிகாரம்: வெல்லம் !
ஹரி ஓம். நம சிவாய
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன்.சுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன். சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம் .
6-7. செவ்வா.அசுபம்
*நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
சித்திரை மாத வரலாற்று சிறப்புகள்…
வரலாற்றில் சித்திரை மாதத்திற்கு என பல்வேறு சிறப்புகள் உள்ளன. அவைகளை பற்றி இங்கு காண்போம்.
சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் என்று கூறப்படுகிறது. சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்றும் கூறுவர்.
சித்திரை முதல் நாளை பிரம்மதேவன் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது.
மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும், சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள்.
இந்த நாளன்றுதான் நான்முகன் இப்பூவுலகைத் தோற்றுவித்தார் என்று புராணம் சொல்கிறது.
சித்திரை மாத பௌர்ணமி நாளில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன் அதாவது, எமதர்மனின் கணக்கர் தோன்றினாராம். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.
ராம நவமியும், அனுமன் ஜெயந்தியும் சித்திரை திங்களில் தான் கொண்டாடப்படுகிறது.
திருமாலின் அவதாரமான பரசுராமன் இந்நாளில் தான் அவதரித்தாகக் கூறப்படுகிறது.
சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அட்சய திதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்ற ஐதீகமும் உண்டு.
சொக்கநாதர்-மீனாட்சியைத் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும்.
சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு.
இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள சித்திரை தாயை நாமும் உவகையோடு வரவேற்று எல்லா வளமும், நலமும் பெற்று வாழ்வோம்.
ஸ்ரீ சுக்கிர பகவான் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!
சௌஜன்யம்..!
அன்யோன்யம் .. !!
ஆத்மார்த்தம்..!
தெய்வீகம்..!.. பேரின்பம் …!!
அடியேன்
ஆதித்யா
(Visited 5 times, 1 visits today)