இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யுவதி – சோதனையிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 26 வயதான பொலிவியப் பெண் கைது செய்யப்பட்டதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர் நேற்று டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கொண்டு வரப்பட்டுள்ள கொக்கெய்ன் கரைசலில் கொக்கெய்ன் போதைப்பொருளின் செறிவு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுவதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் கையிருப்பு 04 கிலோ 600 கிராம் எடையுடையதுடன் அவற்றின் பெறுமதி 230 மில்லியன் ரூபா அல்லது 23 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 500 அமெரிக்க டொலர்களை அவர் பெற்றுக்கொள்ளவிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

 

(Visited 10 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content