உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியன 30 ரூபாயால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிற்றுண்டிகள் 10 ரூபாயாலும், தேநீர் வகைகள் 05 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக ஹர்ஷன ருக்ஷான் குறிப்பிட்டுள்ளார்.





