டிரம்ப்பை உக்ரைனுக்கு வருமாறு ஜெலென்ஸ்கி மீண்டும் அழைப்பு
உரிய ஆயுதங்கள் இன்றி ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்வது கடினம் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளை எச்சரித்துள்ளார்.
மேலும், முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை உக்ரைனுக்கு வருமாறு மீண்டும் அழைப்பு விடுத்தார்.
அவர் வருவார் என்றால், அவருடன் முன்வரிசைக்கு செல்ல நான் தயாராக இருக்கிறேன்” என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு நிதி அளிப்பது தொடர்பில் டொனால்டு ட்ரம்ப் தமது எதிர்ப்பை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
இந்நிலையிலேயே உண்மையான போர் என்பது எப்படி இருக்கும் என்பதை டொனால்டு ட்ரம்ப் நேரிடையாக பார்க்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)