அரசியல் இலங்கை

அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன? பேராளர் மாநாட்டை நடத்துகிறது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி!

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் Democratic Tamil National Alliance பேராளர் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நிகழ்வுக்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்தே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை விளக்கங்களை முன்வைக்கும் நோக்கில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் பங்கேற்கவுள்ளனர். முக்கிய சில தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!