அமெரிக்கா–தைவான் வர்த்தக புரட்சி :வரிகள் குறையும், முதலீடு பெருகும்
ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள், தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15% வரியை உறுதிப்படுத்தும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதே சமயத்தில், அமெரிக்காவின் பல பொருட்களுக்கு தைவான் வரிகளை குறைக்கும் அல்லது நீக்கும் திட்டத்தையும் ஒப்புக்கொண்டது.
ஒப்பந்தம் 2025 ஆம் ஆண்டு முதல் 2029 ஆண்டு வரை அமெரிக்க பொருட்களின் கொள்முதலை அதிகரிக்கும், இதில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், சிவில் விமானங்கள், இயந்திரங்கள், மற்றும் ஜெனரேட்டர்கள் அடங்கும்.
தைவானின் பொருளாதார மற்றும் தொழிற்சாலை வளர்ச்சிக்கு இது முக்கிய தருணம் என தைவான் ஜனாதிபதி லாய் சிங்-டே தெரிவித்துள்ளார்.
2,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க தயாரிப்புகள் தைவானில் பரஸ்பர வரிகளிலிருந்து விலக்குகளைப் பெறும், இதனால் சராசரி வரி 12.33% ஆக குறையும்.
ஒப்பந்தம் அமெரிக்க முதலீடுகளை ஊக்குவிக்கிறது, தைவான் 250 பில்லியன் டொலர் முதலீட்டை உறுதி செய்யும்.
மேலும் மாட்டு இறைச்சி, பால், சோளம் போன்ற அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை உடனடியாக நீக்கி, பன்றி இறைச்சி மற்றும் ஹாம் மீதான வரிகள் 10% ஆக குறைக்கப்படும்.
மோட்டார் வாகனங்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துகளின் வரிகள் மற்றும் தரநிலைகள் தைவானில் அமெரிக்க தரநிலைக்கு ஏற்ப காணப்படும்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கும் என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு முதல் 11 மாதங்களில், அமெரிக்க–தைவான் வர்த்தகம் 2024 ஆம் ஆண்டில் $73.7 பில்லியனில் இருந்து $126.9 பில்லியனாக உயர்ந்தது, இதில் உயர்நிலை AI சில்லுகளின் இறக்குமதி முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.




