கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் கப்பல் ஒன்றை முற்றுகையிட்ட அமெரிக்கா!
கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் போதைப் பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் நேற்று அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
அத்துடன் மேற்படி தாக்குதலை தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.
வெனிசுலாவுக்கு அழுத்தம் கொடுக்கும் “எண்ணெய் தனிமைப்படுத்தல்” உத்தியின் ஒரு பகுதியாக குறித்த கப்பல்கள் முற்றுகையிடப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth ) கூறியுள்ளார்.





