செய்தி தமிழ்நாடு

திருவிழா நாடகத்தில் குத்தாட்டம் போட்டு அசத்திய திருநங்கைகள்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கூழ் வார்த்தல் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை பம்பை, உடுக்கை வாத்தியங்கள் முழங்க அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபா ஆராதனைகள் நடந்தேறியது.

பின்னர், மதியம் கூழ் வார்த்தல் விழாவும், இரவு வானவேடிக்கைகளுடன் கெங்கையம்மன் சிறப்பு பூ அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதனை தொடர்ந்து, நடைபெற்ற ஆடல், பாடல் பக்தி நாடகத்தில் திருநங்கைகள், பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்கள் பங்கேற்றனர்.

அந்த நாடகத்தில் இரண்டு திருநங்கைகள் மற்றும் பெண்கள் குத்தாட்டம் போட்டு அசத்தி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!