UKவின் பிரிஸ்டல் (Bristol Museum) அருங்காட்சியகத்தில் கொள்ளை!
பிரித்தானியாவின் பிரிஸ்டல் (Bristol Museum) அருங்காட்சியகத்தில் இருந்து 600 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25 ஆம் திகதி அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இந்த பொருட்கள் திருடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
திருட்டு தொடர்பில் சந்தேகிக்கப்படும் நான்கு நபர்களின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
திருடப்பட்ட பொருட்கள் பிரித்தானிய வரலாற்றின் பல அடுக்கு பகுதியைப் பற்றிய நுண்ணறிவை வழங்குவதாக கூறப்படுகிறது.
படத்தில் காட்டப்பட்டுள்ள ஆண்களை அடையாளம் கண்டாலோ அல்லது திருடப்பட்ட பொருட்கள் ஆன்லைனில் விற்கப்படுவதைக் கண்டாலோ பொதுமக்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.




