சரிகமபவில் ஈழத்து வர்ஜாவுக்கு நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் கடந்த வாரம், ஈழத்து குயில் வர்ஜாவுக்கு நடுவர் ஸ்ரீனிவாஸ் frame ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.
கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் Dedication சுற்று நடைபெற்றது.
போட்டியாளர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக Dedication சுற்றில் பாடல் பாடியிருந்தனர்.

அந்த வகையில் வர்ஜா தனது சகோதரிகளுக்காக பாடல் பாடினார்.
அவர் பாடுவதற்கு முன்பு, “தங்கைகளுக்கு தான் இன்னொரு அம்மா. அவர்களை காணாமல் இருப்பது கவலையாக இருக்கின்றது. நான் இறுதி மேடைக்கு வந்த பிறகு தான், அவர்களை சந்திக்க நாடுத்திரும்புவேன்” என கூறியிருப்பதாக மிகவும் உருக்கமாக பேசினார்.
அவர் பேசி முடிந்த பிறகு தொகுப்பாளினி அர்ச்சனா, நடுவராக இருக்கும் ஸ்ரீனிவாஸ் உங்களுக்கு ஒரு சிறப்பு பரிசு கொடுக்க காத்திருப்பதாக கூறினார்.
பிறகு மேடைக்கு நடுவர்களை அனைவரையும் அழைத்து தங்கைகளுடன் இருக்கும் frame ஒன்றை பரிசாக கொடுத்து வர்ஜாவை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் மேடைக்கு வரும் போட்டியாளர்கள் தங்கள் குரலால் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்க, கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில் வர்ஜாவுக்கு நடுவர்கள் கொடுத்த இந்த பரிசு இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
இதேவேளை, ஈழத்து குயில் வர்ஜா வெற்றி பெற வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது.






