பொழுதுபோக்கு

அந்த பென்குயின் தான் விஜய் – தளபதி இரசிகர்களின் மீம்ஸ் வைரல்

உலகளவில் வைரலாகி வரும் நிஹிலிஸ்ட் பென்குயினே எங்க அண்ணன் தளபதி விஜய் என விஜய் இரசிகர்கள் வைரல் வீடியோக்களை பரப்பி வருகின்றனர்.

ஒரு பக்கம் அஜித்தை விட கேம்பா குளிர்பானத்துக்கு அஜித் இரசிகர்கள் விளம்பரம் செய்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் விஜய் இரசிகர்கள் இந்த பென்குயின் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

லியோ 2, அட்லி இயக்கத்தில் ஒரு படம் ஒவ்வொரு படத்துக்கும் 250 கோடி சம்பளம், அதற்கு மேல் 300 கோடி என ஏற்றிக் கொண்டு போகாமல் ஜனநாயகன் ரிலீஸ் பஞ்சாயத்து, திமுக, பாஜக கட்சிகளை எதிர்த்து அரசியல், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சட்டப் போராட்டம் என விஜய் கடுமையான மலை பாதையை தேர்ந்தெடுத்து அந்த தனித்துவமான பென்குயினாகவே மாறிவிட்டார் என்கின்றனர்.

இயல்பை கடந்து மாற்று திசையில் பயணிக்கும் போது ஏற்படும் இன்னல்களை எதிர்கொண்டு வெற்றி இலக்கை அடைந்தால் மட்டுமே ஒருவரால் தலைவனாக முடியும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

பென்குயின் கதை – நிஹிலிஸ்ட் என்கிற பென்குயின் தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து, 70 கி.மீ தொலைவில் உள்ள மலைப் பகுதியை நோக்கி நடந்த விசித்திரமான சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தக் காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் உலகளவில் வைரலாகப் பரவி வருகிறது.

பென்குயின் வழிதவறிச் சென்றிருக்கலாம் என நினைத்து, அதை மீண்டும் அதன் கூட்டத்துடன் சேர்த்தனர். ஆனால், மலைப் பகுதியை நோக்கியே அதன் பயணம் தொடர்ந்தது. உணவுப் பொருட்களைக் காட்டி திசைதிருப்ப முயன்றபோதும், தனது இலக்கை நோக்கி உறுதியாகப் பயணித்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

<a href="http://

“>

Sainth

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!