செய்தி

ஈரானில் ஆட்சி மாற்றம்: ட்ரம்ப் கூறுவது என்ன?

  • March 30, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போரினால் அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதால், தற்போது புதியதொரு குழுவுடன் அமெரிக்கா பேச்சு நடத்திவருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். ஈரானின் தற்போதைய ஆட்சியாளர்கள் மிகவும் யதார்த்தமாகச் செயல்படுவதால், அவர்களுடன் ஒரு சுமுகமான உடன்படிக்கை ஏற்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனினும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதையும் அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

இலங்கை செய்தி

‘அரசியல் தீர்வு திட்டம்’: தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்க இணக்கம்!

  • March 30, 2026
  • 0 Comments

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இரு தரப்புக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- “இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் […]

உலகம் செய்தி

கார்க் தீவில் களமிறங்கும் அமெரிக்க படை?

  • March 30, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் இன்று 32 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மையமான கார்க் தீவை Kharg Island ஆக்கிரமிப்பது குறித்து டொனால்ட் ட்ரம்ப் Donald Trump ஆலோசித்து வருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கப் படைகள் அங்கு களமிறக்குவதற்குரிய சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்துவருவதாகக் கூறப்படுகின்றது. ஈரானின் தற்போதைய பலவீனமான பாதுகாப்பு நிலையைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை எளிதாகச் செயல்படுத்த முடியும் என்று அவர் நம்புகின்றார். […]

ஆஸ்திரேலியா செய்தி

எரிபொருள் வரியை 50 வீதத்தால் குறைந்தது ஆஸ்திரேலியா!

  • March 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய அரசாங்கம் பெட்ரோல் மீதான வரியை அடுத்த மூன்று மாதங்களுக்குப் பாதியாகக் குறைத்துள்ளது. மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தி, குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிச் சலுகை அடுத்த மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பதால், வாகன சாரதிகள் மற்றும் போக்குவரத்துத் துறையினருக்கு பெரிய அளவிலான நிதி நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், சரக்குக் போக்குவரத்துச் […]

விளையாட்டு

சென்னை, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

  • March 30, 2026
  • 0 Comments

IPL தொடரின் இன்றைய 3ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் Chennai Super Kings மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals ஆகிய அணிகள் மோதுகின்றன. குவாஹாட்டியிலுள்ள பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். கடந்த சீசனில் போதுமான செயல்திறனை வெளிப்படுத்தாத நிலையில் இந்த ஆண்டில் புதிய வீரர்களுடன் மிகுந்த பலத்துடன் களமிறங்குகிறது சென்னை அணி. அதேநேரத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி, முதல் 2 […]

விளையாட்டு

Mumbai Indians 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

  • March 30, 2026
  • 0 Comments

IPL- 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற முப்பை அணி தலைவர் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய Kolkata Knight Riders அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. 221 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, 19.1 […]

உலகம் செய்தி

7 மாதங்களாக தலைமறைவாகி இருந்த குற்றவாளி பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி!

  • March 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொலைசெய்துவிட்டு சுமார் ஏழு மாதங்களாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி டெஸி ப்ரீமேன், Dezi Freeman விக்டோரியா காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய நேரப்படி இன்று (30) காலை 8.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாலவாவில் உள்ள கிராமப்புறப் பகுதியில் இவர் பதுங்கி இருந்துள்ளார். அவரைச் சரணடையுமாறு பொலிஸார் கோரினர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, ஆயுதங்களுடன் எதிர்த்ததால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் அப்பகுதி மக்களிடையே இருந்த அச்சம் […]

error: Content is protected !!