இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்குடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இஷாரா செவ்வந்தி தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு ஆதரவளித்த இருவரும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளின் முன்னேற்றம் உடனடியாக அறிவிக்கப்படும் என்று காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்திருந்தனர். அதற்கமைய விசாரணை தொடர்பான முதலாவது அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட தகவல்களைக் கருத்தில் […]





