இலங்கையை கட்டியெழுப்ப அமெரிக்கா முழு ஆதரவு!
“ இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு அமெரிக்கா தயாராகவே இருக்கின்றது.” இவ்வாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் தெரிவித்தார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அலிசன் ஹூக்கர் மேற்கண்டவாறு கூறினார். அனர்த்தத்தினால் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தனது இரங்கலை அலிசன் ஹூக்கர் தெரிவித்தார். ” நெருக்கடியான நேரத்தில் பல்வேறு நிவாரண மற்றும் நிவாரணக் […]





