இலங்கை செய்தி

T-20 உலகக்கிண்ணம்: இலங்கையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

இலங்கையில் நடைபெறும் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்கான முழுமையான பாதுகாப்பு கட்டமைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

விசேட அறிக்கையொன்றை விடுத்து பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

குறித்த போட்டி தொடரின் சர்வதேச முக்கியத்துவத்தையும், உலகம் முழுவதிலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெருமளவிலான பார்வையாளர்களை கருத்தில் கொண்டு இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், முப்படைகள், புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போட்டி மைதானங்கள், அணிகள் தங்கியிருக்கும் ஹோட்டல்கள், பயிற்சி தளங்கள், விமான நிலையங்கள் மற்றும் ரசிகர் மையங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும்.

24 மணி நேரமும் செயல்படும் வகையில் மைதான சுற்றுவட்ட பாதுகாப்பு, நுழைவு கட்டுப்பாடு, வாகன சோதனை நிலையங்கள் மற்றும் கூட்டம் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் போட்டிகள் நடைபெறும் காலம் முழுவதும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும்.

பங்கேற்கும் அணிகள், போட்டி அதிகாரிகள், விஷேட பிரமுகர்கள் (VIP) மற்றும் இராஜதந்திரிகளின் பாதுகாப்பு விடயங்கள் விசேட பாதுகாப்பு பிரிவுகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

CCTV கண்காணிப்பு உட்பட நவீன கண்காணிப்பு முறைகள், நிகழ்நேர களநிலவரம் தொடர்பாக அறியவும் விரைவான பதிலளிப்பு திறனையும் மேம்படுத்தவும் உதவும்.

வான்வழி பரப்பு கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் அவசரநிலை பதிலளிப்பு குழுக்கள் மற்றும் அவசர மருத்துவ குழுக்கள், அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

போட்டியின் சிறப்பை பாதுகாக்கும் அதேவேளை, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை நிலைநிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உறுதியளிக்கிறது.

மேலும் பொதுமக்கள், குறிப்பாக பார்வையாளர்கள், பாதுகாப்பு தரப்பினருடன் ஒத்துழைத்து, போட்டி மைதானங்களின் வழிகாட்டல்களை பின்பற்பற்றி, ஒழுங்கு விதிமுறைகளை நிலைநிறுத்தவும், சந்தேகத்துக்கிடமான செயல்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்ய சட்ட அமுலாக்க தரப்பினருக்கு உதவுமாறும் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக் கொள்கிறது.

உலகத்தரம் வாய்ந்த சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை உயர்ந்த தொழில்முறை மற்றும் சிறந்த முறையில் நடத்தும் இலங்கையின் திறனை பிரதிபலிக்கும் வகையில், பாதுகாப்பான மற்றும் மறக்கமுடியாத T20 உலகக்கோப்பை (T20 World Cup) போட்டி அனுபவத்தை வழங்க இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதிபூண்டுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!