இலங்கையில் 70 முஸ்லிம் மாணவிகளின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம் :கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70பேரின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான நடவடிக்கைகளை பரீட்சை ஆணையாளர் நாயகம் முன்னெடுத்து வருகிறார் எனவும் தெரிவித்துளளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய இடையீட்டு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் எழுபது மாணவிகளின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் பர்தா அணிந்திருந்த பெண்கள் பரீட்சைக்கு வரும்போது காதுகளை வெளிக்காட்டிக்கொள்ளாத காரணத்தினால் தாமதமாகியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மாணவிகளின் க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமை அவர்களின் பெறுபேறுகளைப் பாதிக்காது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.