T20 World Cup தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை: அடுத்த போட்டி ஓமானுடன்!
T20 உலகக்கிண்ண தொடரில் 2ஆவது லீக் ஆட்டத்தில் ஓமான் அணியை இலங்கை எதிர்கொள்கின்றது.
எதிர்வரும் 12 ஆம் திகதி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் Pallekele International Cricket Stadium இலங்கை நேரப்படி முற்பகல் 11 AM மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
T20 உலகக் கோப்பை தொடரின் தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை வெற்றி வெற்றிபெற்றது.
நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.
குசல் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். கமிந்து மெண்டிஸ் 19 பந்துகளில் 44 ஓட்டங்கள் குவித்தார்.
தொடர்ந்து ஆடிய அயர்லாந்து 19.5 ஓவர்களில் 143 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.





