SLvsIRE – இரண்டாவது T20 போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அந்த வகையில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அயர்லாந்து அணி சார்பில் லெவிஸ் 119 ஓட்டங்களை தனியாக பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணி பந்துவீச்சில் அச்சினி மற்றும் சஷினி தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர்.
174 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷிதா 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அயர்லாந்து அணி பந்துவீச்சில் பிரேயா மற்றும் ஒர்லா தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.
இதன்மூலம் இரண்டு போட்டிகளை கொண்ட T20 தொடர் 1:1 நிலையில் சமநிலையில் முடிந்தது.