இலங்கை

சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இலங்கை விடுத்த கோரிக்கை: விரைவில் ஐவர் அடங்கிய குழு இலங்கை விஜயம்

விமான நிலையம் மற்றும் குடிவரவு அமைப்புகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்புவதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் இன்று தெரிவித்தார்.

இலங்கையின் குடிவரவுச் சேவைகள் வளர்ச்சியடைய வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்திய அமைச்சர், சிங்கப்பூரின் தரத்திற்கு ஏற்றவாறு இலங்கையின் விமான நிலையம் மற்றும் குடிவரவு அமைப்புகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை மதிப்பீடு செய்து வழங்குமாறு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மே 27ஆம் திகதி இலங்கைக்கு ஒரு குழுவை அனுப்ப சிங்கப்பூர் அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்றார்.

குழுவானது எமது அமைப்புகளை மதிப்பீடு செய்து விரிவான அறிக்கையை எமக்கு சமர்ப்பிக்கும் என அமைச்சர் அலஸ் தெரிவித்துள்ளார்.

“ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் சிறந்த தொழில்நுட்பம் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பொருளாதார சவால்கள் காரணமாக அந்த நிலைகளை உடனடியாக நமது அமைப்பில் செயல்படுத்த முடியாமல் போகலாம். இருப்பினும், அறிக்கையின் அடிப்படையில், எங்களால் வாங்கக்கூடிய சில தொழில்நுட்பங்களை மாற்றியமைக்க முடியும்.” என அமைச்சர் கொழும்பில் நபைபெற்றா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்