ஊழல் மிகக் குறைந்த ஆசிய நாடாக சிங்கப்பூர் தெரிவு : முதலிடம் எந்த நாட்டிற்கு தெரியுமா?
உலக நாடுகளில் ஊழல் மிகக் குறைந்த ஆசிய நாடாக சிங்கப்பூர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் (anti-corruption body Transparency International’) ஊழல் உணர்வுகள் குறியீடு 2025 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த குறியீடு முதன்முதலில் 1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதிலிருந்து முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே ஆசிய நாடாக சிங்கப்பூர் உள்ளது.
முன்னதாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 05 ஆவது இடத்தை பிடித்திருந்த நிலையில் தற்போது 84 புள்ளிகளுடன், 03 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பொதுத்துறை ஊழலின் அளவைக் கொண்டு 182 நாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியலின் படி, முதலாவது இடத்தில் 89 புள்ளிகளுடன், டென்மார்க் காணப்படும் அதேவேளை, 88 புள்ளிகளுடன் பின்லாந்து 02 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஊழல் அடிப்படையில் நாடுகளின் தரவரிசை பட்டியல் இதோ,






