உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரூ.12,490 கோடி சொத்து மதிப்பின் மூலம் உலகத்தின் பணக்கார நடிகராகியுள்ளார்.
M3M ஹுருன் இந்தியா பணக்காரர்கள் 2025 பட்டியலின்படி, பணக்கார (பில்லியனர்) நடிகர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
சுமார் ரூ.12,490 கோடி (1.4 பில்லியன் அமெரிக்க டாலர்) சொத்து மதிப்பின் மூலம், நடிகர் ஷாருக்கான் பலரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

33 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான், கடந்த 2002 ஆம் ஆண்டு அவர் துவங்கிய “ரெட் சில்லிஸ் என்டர்டெயிமென்ட்” எனும் நிறுவனம் சென்னை எக்ஸ்பிரஸ், ரயீஸ், பதான் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.
நடிகர் ஷாருக்கான் ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர் ஆவார்.
ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் முன்னிலை வகிக்கும் இந்த அணியானது ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தங்கள் மற்றும் லீக் வருவாய்களின் மூலம் அதிக வருமானம் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், மும்பை, அலிபாக் போன்ற நகரங்களிலும் பிரிட்டன், டுபாய், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடிகர் ஷாருக்கான் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார்.
இத்துடன், சொகுசு வாகனங்கள் மற்றும் லைஃப் ஸ்டைல் பிராண்டுகளிலும் நடிகர் ஷாருக்கான் முதலீடு செய்துள்ளார். இந்த வருமானங்கள் அனைத்தும் அவரது சொத்து மதிப்பை ரூ.12,490 கோடியாக உயர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.






