கடுமையான குளிர் – நியூயார்க்கில் 18 பேர் மரணம்!
அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தை பாதித்த கடுமையான குளிர் காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜனவரி மாத இறுதியில் இருந்து நியூயார்க் நகரம் கடுமையான குளிர் காலநிலையை அனுபவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
13 நாட்களாக வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸில் அல்லது அதற்குக் கீழே இருப்பதாகக் கூறப்படுகிறது.
வரும் நாட்களில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகரம் முழுவதும் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





