இலங்கை செய்தி

சிரேஷ்ட இடதுசாரி தலைவர் திஸ்ஸ விதாரண காலமானார்!

இலங்கையின் சிரேஷ்ட இடதுசாரி அரசியல் தலைவர்களுள் ஒருவரான லங்கா சமசமாசக் கட்சியின் Lanka Samasamasha Party தலைவர், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண Tissa Witharana காலமானார். (91 வயது)

உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிறி ஜயவர்த்தனபுர கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண 2004ஆம் ஆண்டு தொடக்கம், 2015ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினராக அங்கம் வகித்தார்.

மஹிந்த ஆடிசியில் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். சிரேஷ்ட அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக மஹிந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட சர்வசக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவராகவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண செயல்பட்டார்.

அவரது மறைவு தொடர்பில் அரசியல் பிரமுகர்கள் பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!