நாயின் அளவுள்ள புதிய வகை டைனோசர்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
நாயின் அளவுள்ள புதிய வகை டைனோசர்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இனத்திற்கு எனிக்மாகர்சர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த டைனோசர் இனம் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த டைனோசர் இனம் முதலில் நானோசொரஸ் என வகைப்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது விஞ்ஞானிகள் இது ஒரு புதிய இனம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்த இனம் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட முதல் புதிய டைனோசர் ஆகும்.
64 சென்டிமீட்டர் உயரமும் 180 சென்டிமீட்டர் நீளமும் கொண்ட எனிக்மாகர்சர் ஒரு லாப்ரடோர் ரெட்ரீவரின் அளவைப் போன்றது.





