திடீரென மொட்டையடித்த நடிகை – எப்படி இருக்காங்கனு பாருங்க…
 
																																		பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஹீரோயினின் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரண்யா. அப்படம் அவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
பின்னர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் சரண்யா. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, இப்படத்துக்கு பின்னர் நடிகை சரண்யாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.
பின்னர் மழைக்காலம் என்கிற திரைப்படத்தில் சோலோ ஹீரோயினாக அறிமுகமானார் சரண்யா. இப்படத்தை தீபன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தின் பணிகள் கடந்த 2012-ம் ஆண்டே தொடங்கப்பட்டது.
இப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் இதில் நடிகை சரண்யா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளதாக கூறி பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த சரண்யா, ஸ்கின் கலர் துணி அணிந்து நடித்ததாக கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பேராண்மை படத்துக்கு பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ந்து பிளாப் ஆனதால், சினிமாவை விட்டே விலகி திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது மொட்டையடித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார். மொட்டை அடித்தபோது எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ள சரண்யா, தன்னுடைய வேண்டுதல் நிறைவேறியதால் திருத்தணி முருகனுக்கு மொட்டை அடித்துள்ளதாக கூறி இருக்கிறார். அவர் மொட்டைத் தலையுடன் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் சரண்யாவா இது என ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

 
        



 
                         
                            
