ஹாரி பாட்டர் புத்தகத்தின் அரிய முதல் பதிப்பு ஏலத்தில் விற்பனை!
ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோனின் அரிய முதல் பதிப்பு 36,000 பவுண்டுகளுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
புத்தகத்தின் எதிர்கால மதிப்பை அறியாமல், கிறிஸ்டின் மெக்கல்லோக் தனது மகன் ஆடமுக்காக 1997 இல் ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-அவான் புத்தகக் கடையிலிருந்து இந்த பிரதியை கொள்வனவு செய்துள்ளார்.
Staffordshireஇல் இடம்பெற்ற ஏலத்தில் இந்த புத்தகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஏலதாரர்களின் கூற்றுப்படி, இந்த புத்தகம் 1997 இல் முதன்முதலில் அச்சிடப்பட்ட 500 ஹார்ட்பேக் பிரதிகளில் ஒன்றாகும். இதன் மதிப்பு 30,000 பவுண்டுகள் தொடக்கம் 50,000 பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)