ஜனநாயகனுக்காக பின்வாங்கும் பராசக்தி… ஆட்டநாயகனாக தளபதி

விஜய்யின் கடைசி படமாக உருவாகும் ஜனநாயகன் அடுத்த வருட பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அதாவது ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
இதனால் ரசிகர்கள் அடுத்த வருஷம் தளபதி பொங்கலை கொண்டாட ஆர்வத்துடன் இருக்கின்றனர். அதே சமயம் பொங்கலுக்கு நாங்களும் வருவோம் என பராசக்தியும் களமிறங்கியுள்ளது.
விஜய்யோடு இப்படம் மோதுவதற்கான காரணம் அனைவரும் அறிந்தது தான். படத்தை வெளியிடுவது ரெட் ஜெயன்ட் என்பதால் நிச்சயம் ஜனநாயகன் படத்திற்கு ஏதாவது ஒரு குடைச்சல் கொடுப்பார்கள்.
அதேபோல் அதிக தியேட்டர்கள் கிடைக்காது. வசூல் பின்னடைவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம் விஜய்யை தோற்கடிக்க பிளான் செய்வதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது புது செய்தி ஒன்று கசிந்துள்ளது.
என்னவென்றால் பராசக்தி ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று தான் வெளியாக இருக்கிறதாம். அதன் பிறகு தொடர்ச்சியான விடுமுறை நாள் என்பதால் இதை வைத்து கலெக்ஷன் பார்த்து விட மேலிடம் திட்டமிட்டுள்ளது.
அப்படி என்றால் ஜனநாயகன் சோலோவாக வெளியாகி அந்த நான்கு நாட்களில் வசூல் லாபம் பார்த்து விடும்.
ஆனால் இடையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். போட்டி போட்டே ஆக வேண்டும் என நினைத்தால் அதே நாளில் கூட படம் வெளி வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இது விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை பொறுத்தது என்கின்றனர். பார்க்கலாம் அடுத்த வருடம் பொங்கல் எப்படி இருக்க போகிறது என்று.