துருக்கி–பாகிஸ்தான் மேடையில் சமாதான பேச்சு? பின்னணியில் அமெரிக்கா
அமெரிக்காவிடமிருந்து வந்த ஒரு முன்மொழிவை பாகிஸ்தான், ஈரானிடம் வழங்கியுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
வளைகுடா போரின் பதற்றத்தை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான்
அல்லது துருக்கியில் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒரு மூத்த ஈரானிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அந்த முன்மொழிவின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அது முன்பு கூறப்பட்ட 15 அம்ச அமெரிக்கத் திட்டத்துடன் தொடர்புடையதா என்பதும் தெளிவில்லை என கூறப்படுகிறது.
துருக்கியும் இந்த பேச்சுவார்த்தைகளை நடத்தும் இடமாக பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான், அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவருகிறது.
இருந்தாலும், இந்த தகவல்கள் ஈரான் இராஜதந்திர முயற்சிகளை பரிசீலிக்கக்கூடும் என்ற சாத்தியத்தை வெளிப்படுத்துகின்றன.
இதேவேளை, சுமார் நான்கு வாரங்களாக நீடிக்கும் இந்தப் போருக்கு முடிவு வரலாம் என்ற நம்பிக்கையில், அமெரிக்காவின் 15 அம்சத் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, உலகளவில் எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன.
மேலும், இந்தத் திட்டம் ஈரானுக்கு அனுப்பப்பட்டதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.





