எல்லையில் மோதிக்கொள்ளும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – தோஹாவில் (Doha) ஒன்றுக்கூடிய தலைவர்கள்!

ஆப்கானிஸ்தான் (Afghan)மற்றும் பாகிஸ்தானுக்கு (Pakistan) இடையில் சமீபகாலமாக இடம்பெற்றுவரும் மோதலை தவிர்க்க இரு நாட்டு பிரதிநிதிகளும் உடன்பட்டுள்ளனர்.
இதற்கமைய மோதலை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை கட்டாரின் தலைநகரமான தோஹாவில் (Qatari capital Doha) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் (Afghan) பிரதிநிதிகள் குழுவில் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஆகியோர் அடங்குவர் என்று தலிபான் (Taliban) அரசாங்கம் கூறியுள்ளது.
அதேபோல் பாகிஸ்தானை (Pakistan) பிரதிநிதித்துவப்படுத்தி குழுவொன்று சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யார் யார் சென்றார்கள் என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.
ஒவ்வொரு நாடும் மற்றொன்றின் ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுப்பதாகக் கூறுகின்றன. எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தும் போராளிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் (Pakistan) குற்றம் சாட்டுகிறது. இந்த குற்றச்சாட்டை தலிபான் (Taliban) அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.