“ரஜினி + கமல் + நெல்சன்” வரலாற்று கூட்டணி : அப்போ லோகேஷ் நிலை என்ன?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி – கமல் இணையும் படம் குறித்து அதிகம் பேசப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிக்கும் கமலுக்கும் சேர்ந்து நடிக்கக்கூடிய ஒரு மாபெரும் ஸ்கிரிப்டை அனுப்பியிருந்தார்.

அந்த ஸ்கிரிப்ட் மிகப் பெரிய அளவிலான, வன்முறை நிறைந்த ஆக்ஷன் படம் என்பதாம். அதைப் பார்த்த ரஜினி முதலில் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அதை ஆழமாக சிந்தித்தார்.
கூலி படத்துக்குப் பிறகு கிடைத்த கலவையான விமர்சனங்கள் ரஜினியை யோசிக்க வைத்திருந்தது.
அவர் எண்ணியதாவது – “இப்போ ரசிகர்களுக்கு ஒரு லேசான, ஹூமர் கலந்த கதை வேணும்.” ஆனா லோகேஷ் கதையில் வழக்கம்போல் நிறைய வன்முறை, இருண்ட சாயல் இருந்ததாம்.

அதனாலே ரஜினி அந்த கதையை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தார். ஆனால் அவர் அந்த முடிவை லோகேஷ்க்கு நேரடியாகச் சொல்லவில்லை. அந்த இடைவெளியில்தான், ஜெய்லர் படப்பிடிப்பின் போது அவர் நெல்சனை சந்தித்தார்.
இது லோகேஷ்க்கு தெரியுமா? இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் லோகேஷ்தான் இந்த படத்தை எடுக்கப்போகின்றார் என காத்திருந்த அனைவருக்கும் இது ஏமாற்றமாய் வந்துவிட்டது.
இந்த ரு துருவங்களுக்காக எழுதிய கதையை இனி யாரை வைத்து எடுக்கப்போகின்றார் எள்பதுதான் கேள்வி.
இது இப்படி இருக்க, “நம்ம இருவரும் சேர்ந்து ஒரு லைட் ஸ்டோரி பண்ணலாமா?” என ரஜினி நெல்சனை நேரில் கேட்டாராம். நெல்சன் உடனே ஒரு கதையை தந்தாராம்.

அதை கேட்டவுடனே ரஜினி “இது தான் நம்ம செய்யணும் படம்” என்று உற்சாகமாக சொன்னாராம். இதன் மூலமே லோகேஷ் கதையை விட்டு விலகி, ரஜினி நெல்சனின் கதையைத் தேர்வு செய்தார்.
அந்த வகையில், “ரஜினி + கமல் + நெல்சன்” வரலாற்று கூட்டணி இந்த இணைப்பு உருவாகும் நாளுக்காக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.






