குட்டி நாயா, பெரிய நாயா? சிறிதரன், அர்ச்சுனாவுக்கிடையில் கடும் சொற்போர்!
நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன் மற்றும் அர்ச்சுனாவுக்கிடையில் இன்று (26) கடும் சொற்போர் மூண்டது.
யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றபோதே இருவரும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து கொண்டனர்.
“குட்டி நாய் மாதிரி குறைத்துக்கொண்டிருக்ககூடாது…” என்று சிறிதரன் எம்.பி., இளங்குமரன் எம்.பியை நோக்கி குறிப்பிட்டார்.
இதன்போது இடைமறித்த அர்ச்சுனா எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து குட்டிநாய், பெரிய நாய் என்று விளிக்ககூடாது என இடித்துரைத்தார்.
இந்த விடயத்தை அர்ச்சுனா எம்.பி., மீண்டும், மீண்டும் சபையில் சுட்டிக்காட்டினார்.
இதனால் கடுப்பான சிறிதனர் எம்.பி., விசர் கதை வேண்டாம் என
அர்ச்சுனா எம்.பியை நோக்கி கடுந்தொனியல் விளாசித் தள்ளினார்.
“ஓல் (சாதாரணதரம்) படித்தவர்களுடன் எனக்கு கதைக்க முடியாது.” என்று அர்ச்சுனா சிரித்தபடியே குறிப்பிட்டார். இதனால் சிறிதரன் எம்.பி. கடுப்பானார். கடும் வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள்மீதும் சிறிதரன் எம்.பி. கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இதனால் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.





