பொழுதுபோக்கு

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் வெளியான சர்ப்ரைஸ்…..

நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் முதல் பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 10 நாட்களில் விஜய் நடிக்கும் போர்ஷன் முடிவடையும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். மேலும் விஜய்யின் பிறந்த நாளையொட்டி வரும் ஜூன் 22-ம் தேதி படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது முதல் பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு. முதல் பார்வையில் ரத்தம் தெறிக்க, கையில் சுத்தியுடன் விஜய் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார். கூடவே ஓநாய் ஒன்றும் உள்ளது. காஷ்மீரின் பனி படர்ந்த மலைகள் பின்னணியில் உள்ளன. கூடவே, In the WORLD Of Untamed Rivers, Calm Water Either Become Divine GOD or Dreaded DEMONS என்ற வாக்கியம் அதில் இடம்பெற்றுள்ளது. இதன் பொருள், “கட்டுக்கடங்காத நதிகளின் உலகில் அமைதியான நீர், தெய்வீகம் நிறைந்த கடவுள்களாக அல்லது பயங்கரமான பேய்களாக உருமாறும்” என்பதாகும்.  
(Visited 7 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content