காந்த கண்ணழகியின் அடுத்த பாய்ச்சல்: ரசிகர்கள் கொண்டாட்டம்!
மகா கும்பமேளாவில் பாசிமணி விற்று தனது காந்த கண்களால் உலகளவில் ஹிட்டான மோனசிலா தற்போது என்ன செய்கின்றார் என பலரும் தேடக்கூடும்.
ஆம். அவர் தொடர்பில் சில லேட்டஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவ ஒரே நாளில் உச்சம் தொட்டார்.
இதனையடுத்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்.
இதை தொடர்ந்து மோனலிசா சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
தற்போது ஒரு இந்தி மற்றும் 2 தெலுங்கு படங்களில் நடித்து வரும் மோனலிசா அண்மையில் நேர்காணல் வழங்கியுள்ளார். அன்போது அவர் வெளியிட்ட தகவல்களும் வரவேற்பை பெற்றுள்ளது.
‘கும்பமேளா மூலம் என் வாழ்க்கை நல்லபடியாக மாறி நான் இந்த நிலைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. திடீரென்று கிடைத்த புகழ் மூலம் எனக்கு பொறுப்பும் வந்திருக்கிறது.
என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்த சமூகத்திற்கு நான் நல்லது செய்ய விரும்புகிறேன். என் சொந்த ஊரில் பெண்களுக்கான பாடசாலை கட்ட முடிவு செய்திருக்கிறேன்.
என் முதல் படத்தின் சம்பளத்தை வைத்து அந்த பாடசாலையை கட்டப் போகிறேன்.
கல்வி மூலம் தான் நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன். அதனால் எனக்கு கிடைக்கும் சம்பளத்தை கல்விக்கு செலவு செய்யப்போகிறேன்’ என்றார்.




