இலங்கை செய்தி

முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகத்தை ஒப்படைக்குமாறு ஜே.வி.பிக்கு உத்தரவு

கம்பஹா, யக்கலவிலுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் Frontline Socialist Party அலுவலகத்தை, ஜே.வி.பி JVP கைப்பற்றியது சட்டவிரோதம் என கம்பஹா நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், குறித்த அலுவலகத்தை முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கம்பஹா மேலதிக நீதிவான் ஷிலானி பெரேரா நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என, முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

மேற்படி அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடக் கோரி, முன்னிலை சோசலிசக் கட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவும் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!