ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!
ஹாங்காங்கின் முன்னாள் ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
லாய் மீது இரண்டு தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குறித்த குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள சுருக்கமான ஆவணத்தில், லாய் தனது மோசடி வழக்கில் ஏற்கனவே உள்ள ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையுடன் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனையை தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது 78 வயதாகும் லாய் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது 20 வருடங்கள் மேலதிகமாக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டியேற்படும் என அவரது ஆதரவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவிற்க முன்னதாக மனித உரிமைக் குழுக்களும் மேற்கத்திய அரசாங்கங்களும் லாயின் விடுதலைக்கு அழைப்பு விடுத்தன. சிலர் இந்த வழக்கை “ஒரு ஏமாற்று வேலை” என்று விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





